எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000-ஆகவும், விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.12,000 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதிய உயர்வானது ஆக.15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சுதந்திர நாளன்று, மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ”முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.21.000/-லிருந்து ரூ.22,000/-ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு குடும்ப ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.11,500/-லிருந்து ரூ.12,000/-ஆகவும் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
மேற்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.27,63,750/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த ஓய்வூதிய உயர்வானது 15.08.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!