செய்திகள் :

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

post image

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.

இதில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இன்று தொடங்கி 4 நாள்கள் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் காலையும் மாலையும் நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக இன்று(செப். 18) காலை சென்னை மண்டலத்தை சேர்ந்த மண்டல நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ”திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது. திமுக எங்கிருந்து வந்தது, நீதிக் கட்சியில் இருந்துதானே வந்தது, மக்கள் நீதி மய்ய கட்சியிலும் நீதி உள்ளது. மய்யத்தின் குரல் எல்லா செவிகளிலும் விழும்.

திராவிடம் நாடு தழுவியது. அதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். கணக்கெடுப்பு வரும்போது உங்களுக்கு புரியும்” என்றார்.

பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது.

அவர்கள் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள், பூத் கமிட்டி எத்தனை அமைத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி பரிசீலனை செய்து இன்னும் நகர வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அவர்களிடம் உள்ள குறைகளைக் கேட்டு, என்னென்ன தடைகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை அறிவுறுத்தினேன்” என்றார்.

இதையும் படிக்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும்: அமித் ஷா எச்சரிக்கை!

Makkal Needhi Maiam leader Kamal Haasan has said that joining the DMK is not an alliance, but something more sacred than that.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப். 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்... மேலும் பார்க்க

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,0... மேலும் பார்க்க

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கான பிரச்னையிலேயே அக்கட்சியினர் திணறுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கு அனுமதி வழங்குவதி... மேலும் பார்க்க

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் புது மண்டபத்தில் இ... மேலும் பார்க்க

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. செப். 18ல் தமிழக... மேலும் பார்க்க

தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பொதுக் கூட்டங்களின் போது உயரமான இடங்களில் ஏறும் தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்று தவெக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ... மேலும் பார்க்க