செய்திகள் :

தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

post image

பொதுக் கூட்டங்களின் போது உயரமான இடங்களில் ஏறும் தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்று தவெக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

திருச்சியில் நடைபெற்ற தவெகவின் கூட்டத்துக்கு மாநகர காவல்துறையினர் 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தனர்.

அடுத்தடுத்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொண்டர்கள் உயரமாக இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, விஜய் பிரசாரத்துக்கு நிறைவேற்ற இயலாத, பிற கட்சிகளுக்கு இல்லாத வகையில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான நிபந்தனைகளை வகுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கூட்டங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக குறிப்பிட்ட தொகையை முன்வைப்புத் தொகை பெறும் வகையில் நிபந்தனைகளை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சியில் சேதமடைந்த பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Chennai HC ordered the Tamil Nadu Police to formulate common conditions that would apply to all parties.

இதையும் படிக்க : ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. செப். 18ல் தமிழக... மேலும் பார்க்க

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமலா... மேலும் பார்க்க

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

காஸாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காஸா மூச்சுத் திணறுகிறது, உ... மேலும் பார்க்க

முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்

தில்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தேன், அதை வைத்து அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவ... மேலும் பார்க்க

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்... மேலும் பார்க்க