பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!
தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்படி உருவானது என்பது குறித்த பரிணாம ரீதியான விளக்கத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் காடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. அங்குள்ள சிம்பன்சிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், பிளம்ஸ் போன்ற நன்கு பழுத்த, நொதித்த பழங்களில் உள்ள ஆல்கஹால் அளவை அவர்கள் அளவிட்டனர்.

சிம்பன்சிகள் ஒரு நாளைக்கு சுமார் 10 பவுண்டுகள் (சுமார் 4.5 கிலோகிராம்) பழங்களை உண்கின்றன. இதன் மூலம், அவை தினசரி சராசரியாக 14 கிராம் எத்தனால் (ஆல்கஹால்) உட்கொள்கின்றன. பழங்களில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்கச் செய்வதால், இயற்கையாகவே அதில் ஆல்கஹால் உருவாகிறது. மனிதர்களுடன் ஒப்பிடும்போது தினமும் ஒரு பீர் அருந்துவதற்கு சமம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சிம்பன்சிகள் நாள் முழுவதும் சிறிது சிறிதாக இந்தப் பழங்களை உண்பதால், அவற்றுக்கு போதை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!