இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
பாதுகாப்பிற்காக வெள்ளை நிறம்
விமானங்களில் வெள்ளை நிற பூசுவதற்கு முக்கிய காரணமே வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது.
உயரத்தில் விமானங்கள் பறக்கும் போது சூரிய ஒளி உட்புறத்தில் உறிஞ்சப்படாமல் இருக்கும் வண்ணம் பாதுகாக்கிறது. இதனால் விமானத்தில் உட்புறத்தில் உள்ள மின்னணு உபகரணங்களையும் பயணிகளையும் வெப்பத்திலிருந்து இது பாதுகாக்க உதவுகிறது.

சோதனையை எளிதாக்கும் வெள்ளை நிறம்
விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறு சேதங்கள், விரிசல்கள் என பல விஷயங்களை எளிதாக கண்டறிய உதவுகிறது. இது விமானத்தின் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை எளிதாக்குகிறது. வெள்ளை நிறம் நன்றாக புலப்படுகிறது. இதனால் விமானங்கள் தரையில் இருக்கும் போது புலப்படுத்தலை மேம்படுத்துகிறது.
செலவு குறைவு
வெள்ளை நிறப் பூச்சு மற்ற நிறங்களை விட மலிவாகவும் பராமரிப்பு செலவுகள் குறைவானதாகவும் காணப்படுகிறது. வெள்ளை நிறம் நீண்ட காலத்திற்கு நிறத்தை இழக்காமல் இருக்கும். அடிக்கடி அதன் நிறத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால் அதனையே பயன்படுத்த முன்வருகின்றனர் .
இப்படி விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு அழகில் மட்டும் காரணமாக இல்லாமல் அறிவியல், பாதுகாப்பு, பொருளாதார நன்மைகள் என பல்வேறு விஷயங்கள் உள்ளன.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!