இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!
நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று (செப்.4) நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதில், டிக்டாக் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கை குறித்து மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!