ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு 108 கி.மீ. கிழக்கே இந்திய நேரப்படி, இன்று காலை 10.40 மணியளவில் ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேற்றிரவு 11.53 மணியளவில் ஃபைசாபாத்துக்கு கிழக்கு - தென்கிழக்கே 62 கி.மீ. தொலைவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் குணார் மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் பல மாகாணங்களைத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்க அதிா்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.