செய்திகள் :

GST: "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு...!" - மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

post image

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவம் சார்ந்த பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள், உணவுப்பொருள்கள், கல்வி சம்பந்தப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித வரியாகவும் பொருள்கள் குறைப்படும் என கூறப்பட்டிருக்கின்றன.

எந்தெந்தப் பொருள்களுக்கு வரிச் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழுவிவரம்

நிர்மலா சீதாராமன்

இந்த வரி மாற்றம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி வரிமாற்றத்தை வரவேற்றிருக்கும் அதிமுக எடப்பாடி பழனிசாமி, "அதிமுக சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடி அவர்களுக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜிஎஸ்டி கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது நன்றி.

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்குவது எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வா... மேலும் பார்க்க

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

தெரு நாய்கள்:தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்க... மேலும் பார்க்க

``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

"தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!" “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றி... மேலும் பார்க்க

GST 2.0-ல் பாப்கார்ன், கிரீம் பனுக்கு எத்தனை சதவீத வரி? குட் நியூஸ் தான்!

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, அதைக் குறித்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது.ஆனால், சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டு சர்ச்சைகள்:ஒன்று, பாப்கார்ன்.இன்ன... மேலும் பார்க்க

Udhayanidhi: "என் தலையைச் சீவிக்கொண்டு வந்தால் 10 லட்சம் தருகிறேன் என்றார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பு சார்பில் 'சமூக ஊடகச் சவால்களை எதிர்கொள்வது' க... மேலும் பார்க்க

GST: ``வரலாறு காணாத வரிக் குறைப்பு; தீபாவளி பரிசு'' - நயினார் நாகேந்திரன், எல்.முருகன் பாராட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகி... மேலும் பார்க்க