NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ...
Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்
இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வாதங்களை மாறி மாறி முன்வைத்து வருகின்றனர்.
தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை, திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்து வருவதும் பேசுபொருளாகி வருகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தெருநாய்கள் குறித்து இதில் கமலஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.
நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும்.
இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது.

வெளிநாட்டு நாய்கள் வீட்டிற்குள்; நம் நாய்கள் தெருவில்
நம் நாட்டு நாய்களின் பராமரிப்பு செலவு மிகவும் கம்மி. நாம் உண்டது போக மிச்ச மீதிகளை தான் அதற்கு கொடுப்போம். வீட்டு வாசலில் கிடப்பான் பாதுகாப்பாகவும் இருப்பான்.
என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். அதனால் என் நாட்டு நாய் தெரு நாய் ஆகி விட்டது. அது உரிய பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வளவு பெருகி விட்டது. நாய்களை ஒழித்தால் நோய் வரும். நாய்களை முற்றிலுமாக ஒழித்தால் எலிகள் பெருகும். பிளேக் நோய் வரும். எதையும் சமநிலையில் வைக்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs