சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
இந்த உரையாடலில் பிரதமர் மோடி பேசுகையில்,
சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான பிரசாரங்களை வழிநடத்த உங்களுக்கு நான் ஒரு வீட்டுப்பாடம் தருகிறேன்.
சுதேசி தயாரிப்புகளைப் பெற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதுகுறித்து விவாதிக்கப்படவும் வேண்டும். சுதேசி தயாரிப்புகள் குறித்த அணிவகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகள்தான், உள்ளூர் தயாரிப்புகளுக்கு குடிமக்கள் குரல்கொடுக்கவும் ஊக்குவிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் கடைகளுக்கும் வெளியேயும் சுதேசி வீடு என்ற பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிக்க:தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?