"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
உயர்கல்வியில் அதிக நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மை பெற்றிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது.
இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டுள்ளார்.