செய்திகள் :

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

post image

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நிகழாண்டில் (2025) மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் உடன் சுமார் 1,300 கி.மீ. நீள எல்லை அமைந்துள்ள, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 605 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தாக்குதல்களின் மூலம், 138 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 79 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் மட்டும், கைபர் பக்துன்குவாவில் 129 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், பன்னு மாவட்டத்தில் 42 தாக்குதல்களும், வடக்கு வசிரிஸ்தானில் 15 தாக்குதல்கள், தெற்கு வசிரிஸ்தானில் 14 தாக்குதல்கள் மற்றும் தீர் மாவட்டத்தில் 11 தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

இதேபோல், இஸ்லாமாபாத் நகரத்தைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தானில் 78 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 53 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதில், பெரும்பான்மையான தாக்குதல்கள் பாகிஸ்தானின் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

In the Khyber Pakhtunkhwa province of Pakistan, there have been more than 600 terrorist attacks this year (2025) alone.

நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 1,450-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக அதிகரித்துள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், வாடிகன் நகரத்தில், போப் பதினான்காம் லியோவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். காஸா மீதான ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க, இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் ... மேலும் பார்க்க

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

ஜப்பானைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, விண்வெளி வீரர் எனக் கூறியவரிடம் ரூ. 6 லட்சம் பணத்தை இழந்தார்.ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்... மேலும் பார்க்க

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு 108 கி.மீ. கிழக்கே இந்திய நேரப்படி, இன்று காலை 10.... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு... மேலும் பார்க்க