"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, நாட்டின் டாப் 10 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் மாநில அரசு பெருமைகொள்ளும் விதமாக பல பிரிவுகளில் தமிழக நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
"NIRF தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது!
இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இந்தப் பட்டியல்கள் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது!" எனப் பதிவிட்டுள்ளார்.