செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.

அப்போது அங்கே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், செய்தி சேகரிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இன்று காலை 10 மணியிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் மே தின பூங்காவில் கூட ஆரம்பித்தனர். மதியம் 12 மணியளவில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான பெண்கள் மே தின பூங்காவினுள் கூடியிருந்தனர். வெளியே 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

12:30 மணி வாக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது அங்கிருந்த சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் இதர காவலர்கள் பூங்காவின் உள்பக்கம் மற்றும் கதவு அருகே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

சாலையில் கயிறு மூலம் தடுப்பை ஏற்படுத்தி அதற்கு மேல் எந்தப் பத்திரிகையாளரும் வரக்கூடாதெனக் கடுமையாகவும் கூறினார். பூங்காவினுள் காவல்துறையினர் இறங்கி பெண்களைக் கைது செய்கையில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததால் விஜயகுமாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, 'உங்களை விட்டா நீங்க எங்களோட பணியைச் செய்யத் தடையா இருப்பீங்க. அதான் தடுக்குறோம்' என்றார். பதிலுக்குப் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து, 'இது என்ன சார் புதுசா இருக்கு. எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்க' எனக் கேட்கையில், 'இதுதான் உத்தரவு. வேணும்னா அப்பீல் போயிக்கோங்க' எனக் கூறிவிட்டு பெண்களைக் குண்டுக்கட்டாக கைது செய்வதை மேற்பார்வையிடச் சென்றார்.

விஜயகுமார்
விஜயகுமார்

இணைய ஆணையருக்கு எதிராக சென்னைப் பத்திரிகையாளர் மன்றமும் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க