காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!
GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?
ஜிஎஸ்டி மாற்றம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது.
மக்களுக்கு பலன் தரும்:
இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என நம்பப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``வரிகளின் சீரமைப்பும், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதக் குறைப்பும் வரவேற்கத்தக்கது.
ஆனால் இந்த நடவடிக்கை 8 ஆண்டுகள் தாமதமாக நடந்திருக்கிறது.
ப.சிதம்பரம் கேள்வி
தற்போதைய ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் இருந்த விகிதங்கள் முதலிலேயே அறிமுகப்படுத்தப்படவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் சத்தமாகப் பேசி வந்தோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் வீணாயின.
சரி... இப்போது அரசு கொண்டு வந்திருக்கும் தற்போதைய ஜிஎஸ்டி மாற்றங்களைச் செய்யத் தூண்டியது எது? ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:
நாட்டின் மந்தமான வளர்ச்சி?
அதிகரித்து வரும் வீட்டுக் கடன்?
குறைந்து வரும் வீட்டுச் சேமிப்புகள்?
பீகாரில் தேர்தல்?
ட்ரம்பும் அவரது வரிகளும்?
மேற்கூறிய அனைத்தும்?" எனப் பதிவிட்டிருக்கிறார்.