சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்...
அடுத்தடுத்த பாகங்களுடன் லோகா யுனிவெர்ஸ் - தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி!
லோகா திரைப்படத்தின் வெற்றியையடுத்து, அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விவாதித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
ஓணம் கொண்டாட்டமாக வெளியான லோகா திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், அதே யுனிவெர்ஸில் இன்னும் 5 பாகங்களை எடுக்க திட்டமிட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
ஓணம் கொண்டாட்டமாக, திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாது, தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை அதிகம் பார்த்திராத கதைப் பின்னணியில் ‘சூப்பர் விமேன்' அதாவது, சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரமேற்றுள்ளார்.
டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா படத்தின் மீதான அதீத வரவேற்பால் பாகங்கள் 5-க்கும் அதிகமாகவும் இருக்கலாம் என்றும், அடுத்தடுத்த பாகங்களில் பெரிதாக இருக்கும் என்றும் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.