NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ...
Lokah: வீடியோ காலில் வாழ்த்திய சூர்யா, ஜோதிகா - நஸ்லென் நெகிழ்ச்சி!
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம். இதில் சிறப்பான நடிப்புக்காக பாராட்டப்பட்டு வருகிறார் பிரேமலு புகழ் நஸ்லென்.
இன்று சென்னையில் நடைபெற்ற லோகா படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் வெற்றிக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பதாகப் பேசியுள்ளார் நஸ்லென்.

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள லோகா படத்தை டொமினிக் அருண் இயக்கியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். சூப்பர் ஹீரோ படமான லோகா மலையாளம் தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது.
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Lokah வெற்றிவிழாவில் நஸ்லென் பேச்சு!
வெற்றிவிழாவில் பேசிய நஸ்லென், "இப்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். லைஃப்ல என்னன்னவோ நடக்குது... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. காலையில சூர்யா சாரும் ஜோதிகா மேடமும் வீடியோ கால் பண்ணி படம் நல்லா இருந்தது சொன்னாங்க. இதற்கெல்லாம் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். வாழ்க்கை எனக்கு கொடுக்குற விஷயங்களை பணிவா ஏத்துக்கிறேன். எங்களை சப்போர்ட் செய்த எல்லோருக்கும் நன்றி." என்றார்.