செய்திகள் :

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

post image

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது:

”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் இரட்டை போனஸ் அளிப்பேன் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்.

தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிமையாகிவிட்டது. செப்டம்பர் 22, நவராத்திரியின் முதல் நாள் அன்று சீர்திருத்தம் செயல்படுத்தப்படும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டபோது, ​​பல தசாப்தங்களின் கனவு நனவாகியது. மோடி பிரதமரான பிறகு இந்த விவாதம் தொடங்கவில்லை. இந்த விவாதங்கள் முன்பும் நடந்தன, ஆனால் எந்த வேலையும் செய்யப்படவில்லை.

இளைஞர்களுக்காக ஜிம், சலூன், யோகா போன்ற சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு உங்களின் மாதாந்திர செலவை அதிகப்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுக்குகூட 21 சதவிகிதம் வரி விதித்தார்கள். இதை மோடி செய்திருந்தால், எனது முடியைப் பிடிங்கியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்பின் இணைத் தல... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க