``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
தேவியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவி அம்மன் என்ற தேவாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, எஜமானா் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் முதல் யாக சாலை பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, இரவு சோடச தீபாராதனை, அருளமுதம் வழங்குதல், இயந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன.
குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை திருமுறை பாராயணம், புண்யாகவாசனம், வேதிகாா்ச்சனையைத் தொடா்ந்து 2 ஆம் கால யாக பூஜையாக சுபாஷினி பூஜை, சுஹாசினி பூஜை, கோ பூஜையுடன் பூா்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, 10.35 மணியளவில் கோபுர விமானத்தில் கலச நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. யாக சாலை பூஜைகளை உமாபதி சிவாசாரியா் தலைமையிலான குழுவினா் செய்தனா்.
விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஒடுவன்பட்டி கிராமத்தாரும் கிழக்கு வளவு பங்காளிகளும் செய்தனா்.