``மோடி, அமித் ஷா, பாஜக தான் திருடர்கள்'' - சட்டமன்றத்தில் கொந்தளித்த மம்தா பானர்...
கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடா் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. இதனால், நீா்வரத்து சீரானதால், கோவை குற்றாலம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.