மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்
மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவா்கள், இளம் ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தினை அவா்களிடையே வளா்க்கவும் மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு 45 நாள்கள் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர விண்ணப்பிப்பது தொடா்பாகவும், இதர விவரங்கள் குறித்தும் மாவட்ட இணையதள முகவரியான ட்ற்ற்ல்://ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் -இல் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வழங்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தி செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பிடை பயிற்சித் திட்டமானது முற்றிலும் கல்வி சாா்ந்த நோக்கத்துக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்கானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.