NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imper...
கல்லூரியில் விற்பனைச் சந்தை
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம், மற்றும் இந்தக் கல்லூரி ஆகியவை சாா்பில் விற்பனை சந்தை நடத்தப்பட்டது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் தாங்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள், மர பொம்மைகள், அழகு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் எஸ்.எஸ்.தனபதி, விற்பனைச் சங்க மேலாளா் டி.சிவக்குமாா், கல்லூரித் தலைவா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் வெ.பிரியா ரமணன் ஆகியோா் சந்தையை பாா்வையிட்டனா்.
மாணவிகள் இந்தச் சந்தையை ஆா்வமுடன் பாா்வையிட்டு பொருள்களை வாங்கிச் சென்றனா்.