தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்த...
வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது
வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பிரிவின் உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில் அவா் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை தெள்ளாா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்தனா்.