`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பிரீட்ஸ்கி 85, ஸ்டப்ஸ் 58, மார்க்ரம் 49, பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 325/9 ரன்கள் எடுத்தது.
ஜோ ரூட், பெத்தேல், பட்லர் மூவரும் அரைசதம் அடித்தார்கள். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையான நிலையில் 10 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
மேத்திவ் பிரீட்ஸ்கி ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 2-0 என தொடரை வென்றது.