செய்திகள் :

களமிறங்கிய 5 போட்டிகளிலும் அரைசதம்! கலக்கும் தென்னாப்பிரிக்க வீரர்!

post image

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடிய முதல் 5 போட்டிகளிலும் அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்க இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் கவனம் ஈர்த்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.

லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் சிறப்பாக விளையாடி 77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். நேற்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் அரைசதம் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் மேத்யூ ப்ரீட்ஸ்க் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் குவித்த ரன்கள்

150 ரன்கள் (148 பந்துகளில்) - நியூசிலாந்துக்கு எதிராக

83 ரன்கள் (84 பந்துகளில்) - பாகிஸ்தானுக்கு எதிராக

57 ரன்கள் (56 பந்துகளில்) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

88 ரன்கள் (78 பந்துகளில்) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

85 ரன்கள் (77 பந்துகளில்) - இங்கிலாந்துக்கு எதிராக

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 7) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Young South African batsman Matthew Breetzke has attracted attention after scoring half-centuries in each of his first five ODI debuts.

இதையும் படிக்க: ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!

ஒருநாள் போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் ... மேலும் பார்க்க

27 ஆண்டுகளில் முதல் முறை... தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்னாப்பிரிக்கா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் ... மேலும் பார்க்க

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் 2027 உலகக் கோப்பைக்கு தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியி... மேலும் பார்க்க

ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து பிரபல நியூசிலாந்து வீரர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிரு... மேலும் பார்க்க

ஆஸி. மகளிரணி அறிவிப்பு: 8-ஆவது உலகக் கோப்பையை வெல்லுமா?

மகளிர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஒருநாள் மகளிர் உ... மேலும் பார்க்க

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள... மேலும் பார்க்க