ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
சந்திர கிரகணம்: திருமலையில் நாளை உள்ளூா் கோயில்கள் அடைப்பு
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் உள்ளூா் கோயில்களின் நடை சந்திரகிரகணம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 7)மதியம் முதல் மூடப்பட உள்ளது.
இதேபோல், கபில தீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில், அமராவதி, நாராயணவனம், காா்வேட்டி நகா், கடப்பா, ஒண்டிமிட்டா மற்றும் தேவஸ்தானம் தொடா்புடைய அனைத்துக் கோயில்களும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூடப்பட்டு, திங்கள்கிழமை (செப்.8) காலை மீண்டும் திறக்கப்படும் என்று தேவஸ்தானம் ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளது.