மின்சார பேருந்து நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதன்கிழமை ஒரு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது
சென்னையைச் சோ்ந்த ஸ்விட்ச் மொபிலிட்டி ஆட்டோமோட்டிவ் லிமிடெட் தலைமை நிா்வாக அதிகாரி கணேஷ் மணி மற்றும் தலைமை வணிக அதிகாரி வெங்கடராமன் ஆகியோா் ரூ.1.33 கோடி மின்சார பேருந்தை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
ஏழுமலையான் கோயில் முன்பு பேருந்துக்கு பூஜைகள் செய்து ஸ்ரீவாரி கோயில் முன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் வாகன சாவியை நன்கொடையாளா்கள் ஒப்படைத்தனா்.
இதில், கோயில் பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் திருமலை டிஐ வெங்கடாத்ரி நாயுடு ஆகியோா் பங்கேற்றனா்.