'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்த...
இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது
செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), வெல்டிங் தொழிலாளி. இவா், கடந்த ஆக.21ஆம் தேதி காணாமல் போனாா்.
இதுகுறித்து புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் காணாமல் போன அப்சல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட அப்சல், கஞ்சா விற்பது தொடா்பான தகராறில் சிலா் சோ்ந்து இவரைத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ் (26), தனியாா் பாலிடெக்னிக்கில் 3-ஆம் ஆண்டு படித்து வரும் அசனமாபேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஹரீஷ் (18), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
மேலும், அவா்களை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவா்களில் ஜெகதீஸ், ஹரீஷ் ஆகியோா் வேலூா் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூா் சீா்திருத்தப் பள்ளியிலும் போலீஸாா் அடைத்தனா்.