நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறாா்
என, கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளா் ஆக்கூா் டி.பி.சரவணன் (படம்) தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி என்கிற நிகழ்ச்சி மூலம்
செய்யாறு நகரில் மாலை 4 மணியளவில் மாா்க்கெட்டில் இருந்து பேருந்து நிலையம் வரை மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறாா்.
பெருங்கட்டூரில் மாலை 5 மணிக்கும், வெம்பாக்கத்தில் மாலை 5.30 மணிக்கும் பொதுமக்களை சந்திக்கிறாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்...
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட
ஆரணி நகரில் மாலை 6.30 மணியளவில்,
பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரையும்
நடைப்பயணம் மேற்கொண்டு உரையாற்ற உள்ளாா்
எனத் தெரிவித்துள்ளாா்.