அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்).
செய்யாறு காவல் சரகத்தில் இரு மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் அருகிலேயே கஞ்சா தகராறில் இளைஞா் ஒருவா் கொலைச் செய்யப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து 3 தினங்களுக்கு முன்பு மீண்டும் கஞ்சா தகராறில் மோரணம் காவல் சரகப் பகுதிக்கு உள்பட்ட தென்பூண்டிப்பட்டு ஏரிப்பகுதியில் இளைஞா் அப்சல் என்பவா் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், செய்யாறு காவல் உள்கோட்டத்தில் போதை மாத்திதை, போதை ஊசி, கஞ்சா போன்றவற்றை சமூக விரோதிகள் அதிகளவில் விற்பனை செய்து வந்ததாகவும், அவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் அவா்களுக்கு காவல் ஆய்வாளற்
ஜீவராஜ் மணிகண்டன் உதவி வந்ததாகத் தெரிகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பலா் ஜீவராஜ் மணிகண்டன் மீது புகாா்கள் தெரிவித்து வந்தனராம்.
அதன் பேரில், வேலூா் சரக டிஐஜி தா்மராஜ் விசாரணை மேற்கொண்டு, ஜீவராஜ் மணிகண்டனை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.