செய்திகள் :

தர்மபுரி: பள்ளி மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளை கை கால்களை அமுக்கி விடச் சொல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

இந்த நிலையில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்தியபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, ஆசிரியை கலைவாணி என்பவர் தினமும் மாணவ, மாணவிகளை கை, கால்களை அமுக்கி விடச் சொல்வதாகவும், பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டுவதாகவும் தெரியவந்தது.

உடனடியாக மாவேரிப்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி பணியிடமாற்றம் செய்து அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"4 குழந்தைகள் இருந்தாலும், ஒரு பள்ளியைக் கட்டி ஆசிரியரை நியமிப்போம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்துக் குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.பள்ளி விழாவில்மதுரை சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்... மேலும் பார்க்க

ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின் சாதனைகள் என்னென்ன?

ஆசியாவின் மிக உயரிய குடிமைப்பணி மற்றும் சமூக சேவைக்கான விருதாகக் கருதப்படும் ராமோன் மகசேசே விருதைப் பெறும் முதல் இந்திய NGO என்ற பெருமையைப் பெற்றுள்ளது 'Educate Girls' என்ற அமைப்பு. இது தொலைதூர கிராமங... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில்

SSA ( Sarva Shiksha Abhiyan) திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறா... மேலும் பார்க்க

UPSC/TNPSC: ``தன்னம்பிக்கையும், திட்டமிடலும் வேண்டும்'' – Dr.விஜயகார்த்திகேயன் IAS

‘UPSC/TNPSC குரூப் - 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.‘U... மேலும் பார்க்க

27 ஆண்டுக்கால அர்ப்பணிப்பான கல்விப் பணி; தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான விஜயலட்சுமி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி விஜயலட்சுமிக்கு தேசிய நல்லாசிரியை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 45 பேருக்கு விரு... மேலும் பார்க்க