"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!
கன்னடத்தில் வெற்றிப்படமான சூ ஃப்ரம் சோ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான கன்னட படமான சூ ஃப்ரம் சோ திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.
ஹாரர் காமெடி கதையாக உருவான இப்படத்தை ஜே.பி. துமினாட் என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரு கிராமத்திற்குள் நடக்கும் நகைச்சுவை பேய்க்கதையான இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (செப்.5) தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிக்க: ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!