சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்...
ஆர்ஜென்டீனாவில் மெஸ்ஸியின் கடைசி போட்டி: இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி?
சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடும் மெஸ்ஸியின் போட்டியை இந்திய ரசிகர்கள் நேரலையில் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் இதுதான் மெஸ்ஸியின் கடைசி போட்டியாக இருக்கும் என்பதால் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மெஸ்ஸிக்கு சொந்த மண்ணில் கடைசி போட்டி
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ஆர்ஜென்டீனா தனது சொந்த மண்ணில் வெனிசுலாவை எதிர்த்து விளையாடுகிறது.
இந்தப் போட்டியை இந்தியாவில் எந்தத் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. மாறாக, ஃபேன்கோட் (Fancode) செயலியில் பார்க்க முடியும் என்பது இந்தியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
ஏற்கெனவே, 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள ஆர்ஜென்டீனாவுக்கு இந்தப் போட்டியில் தோற்றாலும் கவலையில்லை. ஆனால், வெனிசுலாவுக்குத்தான் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.
வாழ்வா, சாவா நிலையில் வெனிசுலா
தென் அமெரிக்க கண்டத்தில் டாப் 10 அணியில் முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள்தான் 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்குப் பிறகு செப்.10-இல் ஈகுவாடர் உடன் ஆர்ஜென்டீனா தனது கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதுகிறது.
நடப்பு உலக சாம்பியனான ஆர்ஜென்டீனாவை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துகிறார்.
2026 உலகக் கோப்பையுடன் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.