NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ...
உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!
உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவில் டிரம்ப் அரசு குறிப்பிட்டுள்ளதாவது, ரஷியாவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது விதித்த வரியானது, உக்ரைனில் அமைதிக்கான டிரம்ப்பின் முக்கிய அடி என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஓராண்டுக்கு முன்னதாக அமெரிக்கா ஒரு இறந்த நாடாகவே இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்காவை துஷ்பிரயோகம் செய்த நாடுகள் டிரில்லியன் கணக்கான டாலர் செலுத்துவதால், அமெரிக்கா மீண்டும் ஒரு வலுவான, நிதிரீயான மற்றும் மதிப்புமிக்க நாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி என்றுகூறி, மற்றைய நாடுகள் மீது வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் அரசு, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரியையும் விதித்தது. இந்தியா மீது மொத்தமாக 50 சதவிகித வரியை விதித்தார் டிரம்ப்.
இந்த நிலையில், அதிபரின் அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தி டிரம்ப் விதித்த வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை என்று வரிவிதிப்புக்கு எதிரான உத்தரவுகளை நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்தது.
நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்தது. இருப்பினும், நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவையே கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்தது.
இதனையடுத்து, அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்திலும் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.