செய்திகள் :

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

post image

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. அசாம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களின் மீது வன்முறை நடத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியது.

அந்த விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடந்த செப்.2 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவையில் இன்று (செப்.4) அவரது உரையைத் தொடங்கியபோது, எதிர்க்கட்சியான பாஜகவின் கொறடா சங்கர் கோஷ் உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர் கோஷ் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களான அக்னிமித்ரா பால், மிஹிர் சோசுவாமி, அசோக் டிண்டா மற்றும் பன்கிம் கோஷ் ஆகியோரும் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

It has been reported that 5 BJP members will be suspended following the uproar in the West Bengal Assembly.

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவ... மேலும் பார்க்க