செய்திகள் :

வடசென்னை உலகில்.. சிம்பு! எஸ்டிஆர்-49 முன்னோட்ட விடியோ!

post image

நடிகர் சிலம்பரசனின் 49-வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் உருவாகும் நடிகர் சிலம்பரசனின் 49 வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் இன்று (செப்.4) வெளியிட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 47-வது படமாக உருவாகும், இந்தப் புதிய படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது வெளியான விடியோவின் மூலம் சிம்பு நடிக்கும் இந்தப் படம், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் கூட்டணியில் உருவான பிரபல வடசென்னை திரைப்படத்தின் உலகில் இணைவது உறுதியாகியுள்ளது.

வடசென்னை படத்தின் தலைப்பின் வடிவில், இந்த விடியோவின் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால், அதே யூனிவர்ஸில் ஒரே காலக்கட்டத்தில், இந்தக் கதையும் நடைபெறக்கூடும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அடுத்தடுத்த பாகங்களுடன் லோகா யுனிவெர்ஸ் - தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி!

The preview video of actor Silambarasan's 49th film has been released.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கண்ணப்பாதெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி ... மேலும் பார்க்க

வெற்றியுடன் தொடங்குமா இளம் ஸ்பெயின் அணி? யமால், பெட்ரி மீது அதீத எதிர்பார்ப்பு!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தனது முதல் போட்டியில் களமிறங்கும் ஸ்பெயின் அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இளம் ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

ஆர்ஜென்டீனாவில் மெஸ்ஸியின் கடைசி போட்டி: இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி?

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடும் மெஸ்ஸியின் போட்டியை இந்திய ரசிகர்கள் நேரலையில் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் இதுதான் மெஸ்ஸியின் கடைசி போட்டியாக இருக்கும் என்பதால... மேலும் பார்க்க

அடுத்தடுத்த பாகங்களுடன் லோகா யுனிவெர்ஸ் - தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி!

லோகா திரைப்படத்தின் வெற்றியையடுத்து, அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விவாதித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.ஓணம் கொண்டாட்டமாக வெளியான லோகா திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், ... மேலும் பார்க்க

டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் முன்பதிவைவிட கான்ஜுரிங் படத்திற்கு டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான மதராஸி திரைப... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு: திரளானோர் பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு... மேலும் பார்க்க