"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் முன்பதிவைவிட கான்ஜுரிங் படத்திற்கு டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான மதராஸி திரைப்படம் நாளை (செப்.5) திரைக்கு வருகிறது. இப்படத்துடன் பிரபலமான ஹாலிவுட் பேய்ப்படத் தொடரான கான்ஜுரிங் - 4 திரைப்படமும் வெளியாகிறது.
இந்த நிலையில், சென்னையில் மதராஸியும் கான்ஜுரிங்கும் வெளியாகும் சில மல்டிபிளக்ஸ் திரைகளில் மதராஸி படத்திற்கான டிக்கெட் முன்பதிவைவிட கான்ஜுரிங் படத்திற்கே அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அமரன் போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் மதராஸி பெரிய புரமோஷன்கள் இல்லாமல் வெளியாவதாலும் கான்ஜுரிங் ரசிகர்களாலும் இந்த டிக்கெட் முன்பதிவு மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: எஸ்டிஆர் - வெற்றி மாறன்... அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!