"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!
இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ரோ கன்னா பேசுகையில்,
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக, அமெரிக்க - இந்திய உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பணிகளை டிரம்ப்பின் நடவடிக்கைகள் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகத் தெரிகிறது. டிரம்ப்பின் கொள்கைகளால், சீனா மற்ரும் ரஷ்யாவை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறது. இது அமெரிக்காவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
ரோ கன்னாவின் கூற்றுப்படி, சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.