GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!
விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, கழுகு ஒன்று விமானத்தின் மீது மோதியதாக அவர் கூறினார்.
விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். விமான நிறுவனம் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
விமானம் ஓடுபாதையில் புறப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்தபோது பறவை மோதியது குறிப்பிடத்தக்கது.