செய்திகள் :

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

post image

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், கடைசி அணியாக போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் அணியின் 17 பேர் கொண்ட வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ளது.  

இதற்கு முன்னதாக, 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்றிருந்தது. அதன்பின்னர், இப்போது மீண்டும் போட்டியை நடத்தும் அணியாக பங்கேற்றுள்ளது.

அணி விவரம்

முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரஃபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவ்வதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் சிங், சிம்ரன்ஜீத் சிங், சகீர் கான்.

Waseem leads UAE's charge in Asia Cup 2025 squad

இதையும் படிக்க : பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது. 1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்த... மேலும் பார்க்க

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ... மேலும் பார்க்க