செய்திகள் :

பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!

post image

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், பின்னர் சரிவைச் சந்தித்தது.

எனினும் வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 150.30(0.19%) புள்ளிகள் உயர்ந்து 80,718.01 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.25(0.08%) புள்ளிகள் உயர்ந்த நிலையில் 24,734.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை நீக்கி 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று நேற்று(செப். 3) மத்திய அரசு அறிவித்தது.

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு பங்குச்சந்தையில் இன்று ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி(நுகர்வோர் பொருள்கள்), நிதி சேவைகள் உயர்ந்து வர்த்தகமாகின. ஏனெனில் மின்னணு பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்செக்ஸில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிரென்ட், ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்சிஎல் டெக், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், என்டிபிசி, கோடாக் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று குறைந்தன.

stock market ends with slim gains: Sensex settles 150 points higher, Nifty above 24,700

இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க