மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!
புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.
டாடா ஸ்டீல் பங்குகள் 5.90 சதவிகிதமும், ஜிண்டால் ஸ்டீல் 5.49 சதவிகிதமும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் 5.44 சதவிகிதமும், நேஷனல் அலுமினியம் கம்பெனி 3.37 சதவிகிதமும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் 3.04 சதவிகிதமும், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 2.92 சதவிகிதமும், என்எம்டிசி 1.99 சதவிகிதமும், லாயிட்ஸ் மெட்டல்ஸ் 1.87 சதவிகிதமும், வேதாந்தா 1.84 சதவிகிதமும் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் 1.01 சதவிகிதம் பிஎஸ்இ-யில் உயர்ந்தன.
இந்தப் பங்குகளின் ஏற்றத்தைக் தொடர்ந்து, பிஎஸ்இ உலோகக் குறியீடு 3.08 சதவிகிதம் உயர்ந்து 32,138.17 ஆக உள்ளது.
இதையும் படிக்க: ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!