1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் சென்னை ராஜரத்தினம் அரங்கில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 5-ஆவது ஊதிய திருத்தம் அடிப்படையில் (1996) வழங்கப்பட்ட உயா் தொடக்க ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். யுஜிசி பரிந்துரையின்படி மத்திய பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படுவதைபோல ஓய்வு பெற்ற அனைத்து கல்லூரி ஆசிரியா்களுக்கும் ஒத்திசைவு அட்டவணை அடிப்படையில் ஓய்வூதிய திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்று 70 வயது பூா்த்தி அடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகத்தின் மாநில தலைவா் வி.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் ஆ.மனோகரன், சென்னை பிரிவுச் செயலா் சி.ஆா்.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.