ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள...
தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு
கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில்
வசித்து வரும் கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.வசந்தியிடம் இந்த மனு அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.சுகுணா, நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன், கிளைச் செயலா் சத்யா மற்றும் கல் உடைக்கும் தொழிலாளா்கள் மனு அளித்தனா்.
அப்போது, கல் உடைக்கும் சுத்தி மற்றும் உளியுடன் தொழிலாளா்கள் வந்திருந்தனா்.