Vijay எப்போது பிரசாரம் தொடங்குகிறார்; TVK அடுத்தக்கட்ட Plan என்ன? - CTR Nirmal K...
கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இந்த படம் பெண்-மைய கதையாக உருவாகிறது என்றும், இதில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் போஸ்டர் செஸ் விளையாட்டின் குறியீட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிரவீன் எஸ் விஜய் இயக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.





இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவைத் தாண்டி துல்கர் சல்மானின் தி கேம் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.
அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2, ட்ரெயின் திரைப்படங்கள் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பெண் மைய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா, உப்பு கப்புறம்பு படங்கள் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து அவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இன்னும் பெயரிடப்படாத புதிய படம் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்படுகிறது. தற்போது புரொடக்ஷன் நம்பர் 09 எனக் குறிப்பிடப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...