செய்திகள் :

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post image

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருக்கிறது. யூத வெறுப்புவாதத்துக்கு பல்கலைக்கழகம் அடிபணிந்துள்ளது. அமெரிக்க விரோத ஹமாஸ் ஆதரவு கோட்பாடுகள் நஞ்சைப் பரப்பி வருகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டியது.

இதனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களின் சட்டவிரோத செல்பாடுகள், வன்முறைச் செயல்கள் ஆகியவை குறித்த முழு விவரங்களையும் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் வெளிநாட்டு மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும்.

வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்காக அந்த பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், தற்போது பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டும், இல்லையெனில் சட்டப்பூர்வ விசா அனுமதி இழக்க நேரிடும் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டிய அல்லது அமெரிக்காவைவிட்டு வெளியேறும் சூழல் எழுந்தது.

ஹார்வர்டு பல்கலை நிர்வாகம் கண்டனம்

அமெரிக்க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இது பல்கலைக்கழகத்தும் நாட்டுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்த ஹார்வர்டு நிர்வாகம், டிரம்ப் அரசு உத்தரவுகளை ஏற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

அதைத்தொடரந்து பல்கலைக்கழகத்துக்கான 220 கோடி டாலர்(சுமார் ரூ.18,870 கோடி) நிதியை அரசு நிறுத்து வைத்து டிரம்ப் உத்தரவிட்டதுடன் பல்கலைக்கழகத்திற்கு வரி விதிக்கப்படும் என்று நெருக்கடி அளித்தார்.

இதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் வன்மையாக கண்டித்தனர்.

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்திவைத்து உத்தரவிட்ட டிரம்ப் நிர்வாரகத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமான அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட நிதி முடக்கத்தை நிறுத்தக் கோரியும் பாஸ்டன் நீதிமன்றத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது.

இதற்கு பதிலடி கொடுத்த வெள்ளை மாளிகை, “வரி செலுத்துவோரின் நிதியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய ஹார்வர்டு பல்கலைக்கழகம் தவறிவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டது.

டிரம்ப் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்த அதிபர் டிர்ம்ப் நிர்வாக உத்தரவை ரத்து செய்து பாஸ்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு எதிரான பல்கலை மனுவை விசாரித்த நீதிபதி அலிசன் பரோஸ், ஹார்வர்டு பல்கலை நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது. பல்கலைக்கழகத்துக்கான நிதியுதவி நிறுத்தி வைப்பு சட்டவிரோத பழிவாங்கலுக்கு சமமானது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை கையாள்வதில் ஹார்வர்டு பல்கலை நிர்வாக தாமதங்களுக்காக நிதியுதவியை முடக்கியதற்கும் போராட்டத்திற்கும் சிறிதளவும் தொடர்பு இல்லை என்று நீதிபதி கூறினார்.

மேலும், நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் மீது யூத எதிர்ப்புக் கொள்கையை ஒரு சிறு துறும்பாக பயன்படுத்தி உள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் காண முடியவில்லை என பரோஸ் கூறியுள்ளார்.

மேலும், நாடு யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அது பேச்சுரிமைக்கான உரிமையையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து டிரம்ப் நிர்வாக நிதி முடக்கத்தால் முடக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலை வெற்றி

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு ஹார்வர்டு கல்வி சுதந்திரத்திற்கான போராட்டத்தை உறுதிப்படுத்துவதாகவும், தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான கொள்கைகளை நாங்கள் ஒப்புக்கொண்டாலும், கருத்தின் தாக்கங்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பிடுவோம், சட்ட முன்னேற்றங்களைக் கண்காணிப்போம், மேலும் எங்கள் பணியை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து கவனத்தில் கொள்வோம். நிதி வெட்டுக்கள் மீதான வழக்கில் பல்கலை வெற்றி பெற்றுள்ளது என ஹார்வர்ட் பல்கலை தலைவர் ஆலன் கார்பர் கூறியுள்ளார்.

மேலும் யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராடுவதாக உறுதியளித்த ஆலன், எந்தவொரு அரசாங்கமும் தனியார் பல்கலைக்கழகங்கள் யாரைப் பணி அமர்த்துவது, என்ன கற்பிப்பது, யாரை சேர்ப்பது, பாடத்திட்டம் மற்றும் விசாரணைப் பிரிவுகள் போன்றவை குறித்து கட்டளையிடக்கூடாது. அது பல்கலைக்கழக திருத்த உரிமைகளுக்கு எதிரானது என்று கூறினார்.

மீட்டெடுக்கப்படுமா

இதனிடையே, இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வந்ததாகவும், ஆனால் நிதி உடனடியாக மீட்டெடுக்கப்படுமா என்பதில் அச்சம் ஏற்படுள்ளதாக ஹார்வர்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி நிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என்று நீதிபதியின் உத்தரவில் தெளிவாக கூறியிருந்தாலும், டிரம்ப் அரசு நீதிமன்ற உத்தரவை மேல்முறையீடு செய்யப் போகிறது அல்லது ஆராய்ச்சி நிதியுதவியை தடுக்க வேறு வழிமுறைகளைக் கையாளப் போகிறது என்பதில் கவலை ஏற்பட்டுள்ளதாக சமூகக் கொள்கைகளின் சுகாதாரத் தாக்கத்தை ஆராயும் மையத்தின் இயக்குநர் ரீட்டா ஹமாத் கூறினார்.

நீதிமன்றத்திற்கு அப்பால், டிரம்ப் நிர்வாகமும் ஹார்வர்டு பல்கலை அதிகாரிகளும் விசாரணைகளை முடித்து, பல்கலைக்கழகத்துக்கான கூட்டாட்சி நிதியை மீண்டும் பெற அனுமதிக்கும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

US District Judge Allison Burroughs ruled the cuts amounted to illegal retaliation for Harvard's rejection of the Trump administration's demands for changes to Harvard's governance and policies.

8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்

மதுரை: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்... மேலும் பார்க்க

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று மாற்றியுள்ளதாக வியாழக்கிழம... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் மீதமான அமெரிக்க அரசின் 50 ... மேலும் பார்க்க

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை ... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழக வருவா... மேலும் பார்க்க