செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

post image

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், காலியாக உள்ள, 564 உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், உங்களுடன் ஸ்டாலின் முகாம் அதிக அளவில் நடத்துவதை குறைத்து வாரத்துக்கு இரண்டு முகாம்கள் நடத்தல்(பணிச்சுமையை குறைக்க வேண்டும்) உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சதீஸ் சரவணகுமார் கூறியது:

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வாரத்திற்கு, 6 நாள்கள் நடத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. முகாம் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நிரப்பாமல் 3 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த மாதம் 7 ஆம் தேதி அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து, கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. 2 ஆம் கட்டமாக தமிழகத்திலுள்ள, 16,000 அலுவலர்கள் கடந்த 16 ஆம் தேதி மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவாய் துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் 3 ஆவது கட்டமாக புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (செப் 3, 4) 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு 48 மணி நேரம் பணியில் ஈடுபடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு போராட்டம் தொடர்கிறது என்றார்.

மேலும், தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

The Viralimalai and eluppur taluka offices are deserted as 56 people are involved in this protest...

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே தவிர, புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது சுகாதாரத் துறை, மக்கள் அதிகம் கூடும்... மேலும் பார்க்க

இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, இரண்டு காசுகளை விழுங்கிய நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் க... மேலும் பார்க்க

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் புதன்கிழமை பவுன் ரூ.78,4400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிக... மேலும் பார்க்க

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானம் ஒடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை(செப்.3) 120அடியாக நீடிக்கிறது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீ... மேலும் பார்க்க