அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்
தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி கலைக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்று யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்ததால் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.