Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, இரண்டு காசுகளை விழுங்கிய நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டை தெருப் பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா (7). இவர் திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் 1 ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம் ஆகிய இரண்டு நாணயங்களை வைத்து சிறுமி விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் வாயில் போட்டு கொண்டு அந்த சிறுமி விளையாடிய போது 2 காசுகளும் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால், அந்தக் குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், அந்தக் குழந்தையை மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், உணவு குழாயில் சிக்கி இருந்ததை கண்டறிந்தனர்.
குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து 2 காசுகளையும் வெளியே எடுத்தனர். இதனால், குழந்தையின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.