குமார சம்பவம் டிரைலர்!
நடிகர் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் குமார சம்பவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று கவனம் ஈர்த்தவர் குமரன் தங்கராஜன்.
ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் இவர் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் சிறிய பாத்திரத்தில் குறைந்த நாள்கள் இவர் நடித்திருந்தாலும், தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
அடுத்ததாக, லக்கி மேன் படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான குமார சம்பவம் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். விரைவில் வெளியாகும் இப்படத்தில் பால சரவணன் லிவிங்ஸ்டன், வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வீனஸ் இன்பொடெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!